குறள் 138

ஒழுக்கமுடைமை

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்

nanrikku viththaakum nallolukkam theeyolukkam
yenrum idumpai tharum


Shuddhananda Bharati

Good decorum

Good conduct sows seeds of blessings
Bad conduct endless evil brings.


GU Pope

The Possession of Decorum

'Decorum true' observed a seed of good will be;
'Decorum's breach' will sorrow yield eternally.

Propriety of conduct is the seed of virtue; impropriety will ever cause sorrow.


Mu. Varadarajan

நல்லொழுக்கம்‌ இன்பமான நல்வாழ்க்கைக்குக்‌ காரணமாக இருக்கும்‌; தீயொழுக்கம்‌ எப்போதும்‌ துன்பத்தைக்‌ கொடுக்கும்‌.


Parimelalagar

நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும்-ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்-தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும்.
விளக்கம்:
('நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும், 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம். ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம் ; தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும்,
(என்றவாறு). தீயவொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தருமென்றவாறு. என்றும் - இருமையின்கண்ணுமென்றவாறு.