குறள் 137

ஒழுக்கமுடைமை

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி

olukkaththin yeithuvar maenmai ilukkaththin
yeithuvar yeithaap pali


Shuddhananda Bharati

Good decorum

Conduct good ennobles man,
Bad conduct entails disgrace mean.


GU Pope

The Possession of Decorum

'Tis source of dignity when 'true decorum' is preserved;
Who break 'decorum's' rules endure e'en censures undeserved.

From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace.


Mu. Varadarajan

ஒழுக்கத்தால்‌ எவரும்‌ மேம்பாட்டை அடைவர்‌; ஒழுக்கத்திலிருந்து தவறுவதால்‌ அடையத்‌ தகாத பெரும்‌ பழியை அடைவர்‌.


Parimelalagar

ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர்-எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர்-அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர்.
விளக்கம்:
(பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம்பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், 'எய்தாப் பழி எய்துவர்' என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர் ; அஃ தின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர்,
(என்றவாறு).