குறள் 136

ஒழுக்கமுடைமை

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து

olukkaththin olkaar uravor ilukkaththin
yaetham padupaak karindhthu


Shuddhananda Bharati

Good decorum

The firm from virtue falter not
They know the ills of evil thought.


GU Pope

The Possession of Decorum

The strong of soul no jot abate of 'strict decorum's' laws,
Knowing that 'due decorum's' breach foulest disgrace will cause.

Those firm in mind will not slacken in their observance of the proprieties of life, knowing, as they do, the misery that flows from the transgression from them.


Mu. Varadarajan

ஒழுக்கம்‌ தவறுதலால்‌ குற்றம்‌ உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர்‌ ஒழுக்கத்தில்‌ தவறாமல்‌ காத்துக்‌ கொள்வர்‌.


Parimelalagar

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்-செய்தற்கு அருமை நோக்கி ஒழுக்கத்தின் சுருங்கார் மனவலி உடையார்; இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து-அவ்விழுக்கத்தால் தமக்கு இழிகுலம் ஆகிய குற்றம் உண்டாம் ஆற்றை அறிந்து.
விளக்கம்:
(ஒழுக்கத்தின் சுருக்கம் அதனை உடையார் மேல் ஏற்றப்பட்டது. கொண்ட விரதம் விடாமை பற்றி 'உரவோர்' என்றார்.) --


Manakkudavar

(இதன் பொருள்) ஒழுக்கத்தினின்று நீங்கார் அறிவுடையார் ; அதனைத் தப்பினாற் குற்றம் வருதலை யறிந்து,
(என்றவாறு). இஃது இதனை அறிவுடையார் தவிராரென்றது. குற்றம் வருதல் பின்னே காணப்படும்.