குறள் 135

ஒழுக்கமுடைமை

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு

alukkaa rutaiyaankan aakkamponru illai
olukka milaankan uyarvu


Shuddhananda Bharati

Good decorum

The envious prosper but ill
The ill-behaved sinks lower still.


GU Pope

The Possession of Decorum

The envious soul in life no rich increase of blessing gains,
So man of 'due decorum' void no dignity obtains.

Just as the envious man will be without wealth, so will the man of destitute of propriety of conduct be without greatness.


Mu. Varadarajan

பொறாமை உடையவனிடத்தில்‌ ஆக்கம்‌ இல்லாதவாறு போல, ஒழுக்கம்‌ இல்லாதவனுடைய வாழ்க்கையில்‌ உயர்வு இல்லையாகும்‌.


Parimelalagar

அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று - அழுக்காறுடையான்மாட்டு ஆக்கமில்லாதாற்போல; ஒழுக்கம் இலான் கண் உயர்வு இல்லை - ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை.
விளக்கம்:
(உவமையான் ஒழுக்கம் இல்லாதவன் சுற்றத்திற்கும் உயர்ச்சி இல்லை என்பது பெற்றாம்; என்னை? "கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்ற"மும் (குறள்.166) நல்கூர்தலின். உயர்வு: உயர் குலமாதல்.)


Manakkudavar

(இதன் பொருள்) மனக்கோட்ட முடையவன்மாட்டு ஆக்கம் இல்லை யானாற்போல் ' ஒழுக்கமில்லாதான்மாட்டு மிகுதியில்லையாம்,
(என்றவாறு). இஃது உயர்ச்சியில்லையா மென்றது.