குறள் 134

ஒழுக்கமுடைமை

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

marappinum oaththuk kolalaakum paarppaan
pirappolukkang kunrak kedum


Shuddhananda Bharati

Good decorum

Readers recall forgotten lore,
But conduct lost returns no more.


GU Pope

The Possession of Decorum

Though he forget, the Brahman may regain his Vedic lore;
Failing in 'decorum due,' birthright's gone for evermore.

A Brahman though he should forget the Vedas may recover it by reading; but, if he fail in propriety of conduct even his high birth will be destroyed.


Mu. Varadarajan

கற்ற மறைப்பொருளை மறந்தாலும்‌ மீண்டும்‌ அதனை ஓதிக்‌ கற்றுக்‌ கொள்ள முடியும்‌; ஆனால்‌ மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம்‌ குன்றினால்‌ கெடும்‌.


Parimelalagar

ஓத்து மறப்பினும் கொளலாகும் கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்-அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும்.
விளக்கம்:
(மறந்தவழி. இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.)


Manakkudavar

(இதன் பொருள்) பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும், பின்னும் ஓதிக்கொள்ளலாம்; ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்,
(என்றவாறு). இஃது ஒழுக்கம் கல்வியினும் வலிதான்வாறு கூறிற்று.