குறள் 133

ஒழுக்கமுடைமை

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

olukkam utaimai kutimai ilukkam
ilindhtha pirappaai vidum


Shuddhananda Bharati

Good decorum

Good conduct shows good family
Low manners mark anomaly.


GU Pope

The Possession of Decorum

'Decorum's' true nobility on earth;
'Indecorum's' issue is ignoble birth.

Propriety of conduct is true greatness of birth, and impropriety will sink into a mean birth.


Mu. Varadarajan

ஒழுக்கம்‌ உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின்‌ தன்மையாகும்‌; ஒழுக்கம்‌ தவறுதல்‌ இழிந்த குடிப்பிறப்பின்‌ தன்மையாகிவிடும்‌.


Parimelalagar

ஒழுக்கம்-உடைமை குடிமை-எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம்; இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்-அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ் வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.
விளக்கம்:
(பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்ததராவர் ஆகலின் 'குடிமையாம்' என்றும்; உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் 'இழிந்த பிறப்பாய் விடும்' என்றும் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ் விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம் ; அதனைத் தப்பி ஒழுகுவனாயின், உயர்குலத்தனாயினும் இழிகுலத் தானாயே விடும்,
(என்றவாறு). இது குலங்கெடுமென்றது.