Kural 132
குறள் 132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை
parindhthompik kaakka olukkam thaerindhthompith
thaerinum akhthae thunai
Shuddhananda Bharati
Virtues of conduct all excel;
The soul aid should be guarded well.
GU Pope
Searching, duly watching, learning, 'decorum' still we find;
Man's only aid; toiling, guard thou this with watchful mind.
Let propriety of conduct be laboriously preserved and guarded; though one know and practise and excel in many virtues, that will be an eminent aid.
Mu. Varadarajan
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.
Parimelalagar
ஒழுக்கம் ஓம்பிப் பிரிந்து காக்க-ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க; தெரிந்த ஓம்பித் தேரினும் துணை அஃதே - அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, 'இவற்றுள் இருமைக்கும் துணையாவது யாது?' என்று மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய் முடிவது அவ்வொழுக்கமே ஆகலான்.
விளக்கம்:
('பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்து சிறப்புக் கூறப்பட்டது.)
Manakkudavar
(இதன் பொருள்) வருந்திப் போற்றி யொழுக்கத்தினைக் காக்க ; எல்லா வறங்களில் னும் நல்லதனைத் தெரிந்து அதனையுந் தப்பாமலாராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையாமாதலால்,
(என்றவாறு). இஃது ஒழுக்கங் காக்கவேண்டுமென்றது.