Kural 131
குறள் 131
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்
olukkam viluppandh tharalaan olukkam
uyirinum oampap padum
Shuddhananda Bharati
Decorum does one dignity
More than life guard its purity.
GU Pope
'Decorum' gives especial excellence; with greater care
'Decorum' should men guard than life, which all men share.
Propriety of conduct leads to eminence, it should therefore be preserved more carefully than life.
Mu. Varadarajan
ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்.
Parimelalagar
ஒழுக்கம் விழுப்பம் தரலான்-ஒழுக்கம் எல்லார்க்கும் சிறப்பினைத் தருதலான்; ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்-அவ்வொழுக்கம் உயிரினும் பாதுகாக்கப்படும்.
விளக்கம்:
(உயர்ந்தார்க்கும் இழிந்தார்க்கும் ஒப்ப விழுப்பம் தருதலின், பொதுப்படக் கூறினார். சுட்டு வருவிக்கப்பட்டது. அதனால், அங்ஙனம் விழுப்பந் தருவதாயது ஒழுக்கம் என்பது பெற்றாம். உயிர் எல்லாப் பொருளினும் சிறந்தது ஆயினும், ஒழுக்கம் போல விழுப்பம் தாராமையின் உயிரினும் ஓம்பப்படும்' என்றார்.)
Manakkudavar
ஒழுக்கமுடைமையாவது தத்தங் குலத்திற்கும் இல்லறத்திற்கும் ஏற்ற ஒழுக்கமுடையாராதல். (இதன் பொருள்) ஒழுக்கமுடைமை சீர்மையைத் தருதலானே, அவ்வொழுக்கத் தைத் தனது உயிரைக்காட்டினும் மிகக் காக்கவேண்டும்,
(என்றவாறு). இஃது ஒழுக்கம் மேற்கூறிய நன்மையெல்லாந் தருமாதலின், அதனைத் தப்பாமற் செய்யவேண்டுமென்று வலியுறுத்திற்று.