குறள் 1296

நெஞ்சொடுபுலத்தல்

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு

thaniyae irundhthu ninaiththakkaal yennaith
thiniya irundhthathaen naenjsu


Shuddhananda Bharati

Chiding the heart

My itching mind eats me anon
As I muse on him all alone.


GU Pope

Expostulation with Oneself

My heart consumes me when I ponder lone,
And all my lover's cruelty bemoan.

My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.


Mu. Varadarajan

காதலரைப்‌ பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என்‌ நெஞ்சம்‌ என்னைத்‌ தின்பதுபோல்‌ துன்பம்‌ செய்வதாக இருந்தது.


Parimelalagar

இதுவும் அது. என் நெஞ்சு இருந்தது - என் நெஞ்சு ஈண்டு இருந்தது; தனியே இருந்து நினைத்தக்கால் - காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னோடு நினைத்தக்கால்; என்னைத் தினிய - அவ் அளவறிந்து என்னைத் தின்பது போன்று துன்பம் செய்தற்கே.
விளக்கம்:
('என் மாட்டிருந்தது அன்று அவர் கொடுமைகளை உட்கொண்டு எனக்கு ஆற்றாமை செய்தற்கே; இன்று அவை நோக்கி அவரொடு புலத்தற்கன்று,' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) என்னெஞ்சு, யான் தனிப்பட்டிருந்து நினைத்தால் உடம்படாது என்னை நலிவதாக இருந்தது, (எ - று ) இது தலை மகள் நெஞ்சு அவர் செய்கின்ற கொடுமையை யுட்கொண்டு உள் ளாதே, யான் தனிப்பட்டால் நலிவதாக இருந்தது; நீ வருதலானே இப்பொழுது தப்பினேனென்று அதனோடு புலந்து தோழிக்குக் கூறியது.