குறள் 1295

நெஞ்சொடுபுலத்தல்

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு

paeraaamai anjsum paerinpirivu anjsum
araaa idumpaiththaen naenjsu


Shuddhananda Bharati

Chiding the heart

Frets to gain and fears loss in gain
O my heart suffers ceaseless pain.


GU Pope

Expostulation with Oneself

I fear I shall not gain, I fear to lose him when I gain;
And thus my heart endures unceasing pain.

My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow.


Mu. Varadarajan

(காதலரைப்‌ பெறாதபோது பெறாமைக்கு அஞ்சும்‌; பெற்றால்‌ பிரிவை நினைந்து அஞ்சும்‌; (இவ்வாறாக) என்நெஞ்சம்‌ தீராத துன்பம்‌ உடையதாகின்றது.


Parimelalagar

வாயிலாகச் சென்ற தோழி கேட்பத் தலைமகள் சொல்லியது. பெறாமை அஞ்சும் - காதலரைப் பெறாத ஞான்று அப்பெறாமைக்கு அஞ்சாநின்றது; பெறின் பிரிவு அஞ்சும் - பெற்றக்கால் வரக்கடவ பிரிவினை உட்கொண்டு அதற்கு அஞ்சா நின்றது; என் நெஞ்சு அறா இடும்பைத்து - ஆகலான், என் நெஞ்சம் எஞ்ஞான்றும் நீங்காத இடும்பையை உடைத்தாயிற்று.
விளக்கம்:
(காதலரைப் பெற்று வைத்துக் கலவியிழத்தல் உறுதியன்று என்னும் கருத்தான் வாயில் நேர்கின்றாளாகலின், 'பெறாமை அஞ்சும்' என்றும், 'கலவி ஆராமையின் இன்னும் இவர் பிரிவாராயின் யாது செய்தும்' என்பது நிகழ்தலின், 'பெறின் பிரிவு அஞ்சும்' என்றும், இவ்விரண்டுமல்லது பிறிது இன்மையின், 'எஞ்ஞான்றும் அறா இடும்பைத்து' என்றும் கூறினாள்.)


Manakkudavar

(இதன் பொருள்) காதலரைப் பெறாத காலத்துப் புணர்வு இல்லையோ என்று அஞ் சும்; பெற்றோமாயின், பிரிவாரோ என்று அஞ்சும்; ஆதலால், இடைவிடாத துன் பத்தை உடைத்து என்னெஞ்சு,
(என்றவாறு). இது தலைமகள் ஆற்றாமைகண்டு, தூதுவிடக் கருதிய தோழிக்கு அவர் வந் தாலும் இதற்குள்ளது துன்பமே யென்று அதனோடு புலந்து கூறியது. 7