குறள் 1293

நெஞ்சொடுபுலத்தல்

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்

kettaarkku nattaaril yenpatho naenjsaenee
paettaangku avarpin selal


Shuddhananda Bharati

Chiding the heart

You follow him at will. Is it
"The fallen have no friends" my heart?


GU Pope

Expostulation with Oneself

'The ruined have no friends, 'they say; and so, my heart,
To follow him, at thy desire, from me thou dost depart.

O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?


Mu. Varadarajan

நெஞ்சே! நீ உன்‌ விருப்பத்தின்‌ படியே அவர்‌ பின்‌ செல்வதற்குக்‌ காரணம்‌, துன்பத்தால்‌ அழிந்தவர்க்கு நண்பர்‌ இல்லை என்னும்‌ எண்ணமோ?


Parimelalagar

இதுவும் அது. நெஞ்சே; நெஞ்சே, நீ பெட்டாங்கு அவர்பின் செலல் - என்மாட்டு நில்லாது நீ விரும்பியவாறே அவர் மாட்டுச் செல்லுதற்குக் காரணம்; கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ? - கெட்டார்க்கு நட்டார் உலகத்து இல்லை என்னும் நினைவோ? நின்னியல்போ? கூறுவாயாக.
விளக்கம்:
('என்னை விட்டு அவர்மாட்டுச் சேறல் நீ பண்டே பயின்றது,' என்பாள்; 'பெட்டாங்கு' என்றும், தான் இதுபொழுது மானமிலளாகலின், 'கெட்டார்க்கு' என்றும் கூறினாள். 'பின்' என்பது. ஈண்டு இடப் பொருட்டு. 'செலல்' என்பது ஆகுபெயர். ''ஒல்கிடத்து உலப்பிலா உணர்விலார் தொடர்பு''
விளக்கம்:
(கலித். பாலை 25) ஆயிற்று, நின் தொடர்பு என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) நெஞ்சே! நீ என்னிடத்து நில்லாது வேண்டின வண்ணமே அவர் பின்பே செல்கின்றது, கெட்டார்க்கு நட்டார் இல்லையென்பதனானேயோ?