Kural 1290
குறள் 1290
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று
kannin thuniththae kalangkinaal pulluthal
yenninum thaanvithup putrru
Shuddhananda Bharati
She feigned dislike awhile but flew
Faster for embrace than I do.
GU Pope
Her eye, as I drew nigh one day, with anger shone:
By love o'erpowered, her tenderness surpassed my own.
She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.
Mu. Varadarajan
கண்பார்வையின் அளவில் பிணங்கி, என்னைவிடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, (பிணங்கிய நிலையையும் மறந்து கலங்கிவிட்டாள்.
Parimelalagar
இதுவும் அது. கண்ணின் துனித்தே-காதலி முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன் கண் மாத்திரத்தான் ஊடி; புல்லுதல் என்னினும் தான் விதுப்பு உற்றுக் கலங்கினாள்- புல்லுதலை என்னினும் தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால் யான் இத்தன்மையேனாகவும் விதுப்பின்றி ஊடி நிற்கின்ற இவள் அவளல்லள்.
விளக்கம்:
(கண் மாத்திரத்தான் ஊடல்-சொல் நிகழ்ச்சியின்றி அது சிவந்த துணையே யாதல். 'அவளாயின் இங்ஙனம் ஊடற்கண் நீடாள்' என்பது பயன்.)
Manakkudavar
(இதன் பொருள்) கண்ணாலே புலந்தும், அதனையும் ஊடி நிறுத்தாது கலக்கமுற் றாள், புணர்தலை என்னினும் மிகத் தான் விரைதலானே,
(என்றவாறு). இது தலைமகளுடற் குறிப்புப் புணர்வு வேட்டல் கண்டு தலைமகன் தன் னுள்ளே சொல்லியது.