Kural 1288
குறள் 1288
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு
iliththakka innaa seyinum kaliththaarkkuk
kallatrrae kalvanin maarpu
Shuddhananda Bharati
Like wine to addicts that does disgrace
Your breast, O thief, is for my embrace!
GU Pope
Though shameful ill it works, dear is the palm-tree wine
To drunkards; traitor, so to me that breast of thine!
O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives the man unpleasant disgrace.
Mu. Varadarajan
கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.
Parimelalagar
தலைமகள் புணர்ச்சி? விதுப்பு அறிந்த தோழி, தலைமகற்குச் சொல்லியது. கள்வ - வஞ்சக; களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் கள் அற்றே - தன்னை உண்டு களித்தார்க்கு இளிவரத்தக்க இன்னாதவற்றைச் செயினும் அவரால் மேன்மேல் விரும்பப்படுவதாய கள்ளுப் போலும்; நின் மார்பு - எங்கட்கு நின் மார்பு.
விளக்கம்:
(அவ்வின்னாதன நாணின்மை, நிறையின்மை. ஒழுக்கமின்மை, உணர்வின்மை என்றிவை முதலாயின. 'எங்கட்கு நாணின்மை முதலியவற்றைச் செய்யுமாயினும், எங்களால் மேன்மேல் விரும்பப் படா நின்றது' என்பதாம். 'கள்வ' என்றதும், அது நோக்கி.)
Manakkudavar
(இதன் பொருள்) பிறர் இகழத்தக்க இன்னாமையை நீ எ மக்குச் செய்யவும், மது வுண்டு களித்தார்க்கு அதனாலுள்ள குற்றத்தினைக் கண்டு வைத்தும் அதனை யுண்ணல் வேட்கை நிகழு மாறுபோலப் புணர்வு வேட்கையைத் தாராநின்றது, வஞ்சகா! நின் மார்பு,
(என்றவாறு). இது புலவிக்குறிப்பு நீங்கின தலை மகள் தலைமகற்குச் சொல்லியது