குறள் 1286

புணர்ச்சிவிதும்பல்

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை

kaanungkaal kaanaen thavaraaya kaanaakkaal
kaanaen thavaral lavai


Shuddhananda Bharati

Longing for reunion

When he's with me I see not fault
And nought but fault when he is not.


GU Pope

Desire for Reunion

When him I see, to all his faults I 'm blind;
But when I see him not, nothing but faults I find.

When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.


Mu. Varadarajan

காதலரை யான்‌ காணும்போது (அவருடைய செயல்களில்‌) தவறானவற்றைக்‌ காண்பதில்லை.அவரைக்‌ காணாத போது தவறு அல்லாத நன்மைகளைக்‌ காண்பதில்லை.


Parimelalagar

இதுவும் அது. காணுங்கால் தவறாய காணேன் - கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறல்லவை காணேன்-காணாத பொழுது அவையேயல்லது பிறவற்றைக் காண்கின்றிலேன்.
விளக்கம்:
(செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்,' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) அவனைக்கண்ட பொழுது அவன் குற்றமாயின யாவும் காணேன்; அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன், (எ-று). 9