குறள் 1285

புணர்ச்சிவிதும்பல்

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து

yeluthungkaal koalkaanaak kannaepol konkan
palikaanaen kanda idaththu


Shuddhananda Bharati

Longing for reunion

When close I see not lord's blemish
Like eyes that see not painter's brush.


GU Pope

Desire for Reunion

The eye sees not the rod that paints it; nor can I
See any fault, when I behold my husband nigh.

Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him.


Mu. Varadarajan

மை தீட்டும்‌ நேரத்தில்‌ தீட்டும்‌ கோலைக்‌ காணாத கண்களைப்போல்‌, காதலனைக்‌ கண்டபோது மட்டும்‌ அவனுடைய குற்றத்தை நினைக்காமல்‌ மறந்து விடுகின்றேன்‌.


Parimelalagar

இதுவும் அது. எழுதுங்கால் கோல் காணாக் கண்ணேபோல் முன்னெல்லாங் கண்டிருந்தும் எழுதுங்காலத்து அஞ்சனக் கோலின் இயல்பு காணமாட்டாத கண்ணேபோல; கொண்கன் பழி கண்டவிடத்துக் காணேன் - கொண்கனது தவறு காணாதவிடத்தெல்லாம் கண்டிருந்து, அவனைக் கண்ட விடத்துக் காணமாட்டேன்.
விளக்கம்:
(கோல்; ஆகுபெயர். இயல்பு: கருமை. 'என் இயல்பு இதுவாகலின், மேலும் அது தப்ப முடியாது' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) கண்ணெழுதுங் காலத்துத் தன் இமையகத்துப் புகுந்த கோலைக் காணாத கண்ணைப்போல, கொண்கனது குற்றத்தினையும் அவனைக்கண்ட விடத்துக் கண்டிலேன்,
(என்றவாறு). இது மேற்கூறிய சொற்கேட்டு நீ அவனைக் கூறிய குற்றமெல்லாம் யாண் டுப்போயின வென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.