Kural 1284
குறள் 1284
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு
oodatrkan senraenman tholi athumarandhthu
koodatrkan senrathuyen naenjsu
Shuddhananda Bharati
Huff I would, maid, but I forget;
And leap to embrace him direct.
GU Pope
My friend, I went prepared to show a cool disdain;
My heart, forgetting all, could not its love restrain.
O my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him.
Mu. Varadarajan
தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்: ஆனால் என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.
Parimelalagar
இதுவும் அது. தோழி - தோழீ! ஊடற்கண் சென்றேன் - காதலரைக் காணாமுன் அவர்செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன்; என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது - கண்டபின் என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது.
விளக்கம்:
(சேறல் நிகழ்தல் நினைத்த நெஞ்சிற்கும் ஒத்தலின், 'அது மறந்து' என்றாள். அச்செலவாற் பயன் என் என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது முடிந்ததில்லை' என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) தோழி ! யான் ஊடலைக் கருதிச் சென்றேன் ; அவனைக் கண்ட பொழுதே அதனை மறந்து கூடலைக்கருதிற்று, என்னெஞ்சு, (எ - று. இது நீ அவனோடு புலவாது கூடிய தென்னை யென்று நகையாடிய தோழிக் குத் தலைமகள் கூறியது.