குறள் 127

அடக்கமுடைமை

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

yaakaavaa raayinum naakaakka kaavaakkaal
chokaappar sollilukkup patdu


Shuddhananda Bharati

Self

Rein the tongue if nothing else
Or slips of tongue bring all the woes.


GU Pope

The Possession of Self-restraint

Whate'er they fail to guard, o'er lips men guard should keep;
If not, through fault of tongue, they bitter tears shall weep.

Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.


Mu. Varadarajan

காக்க வேண்டியவற்றுள்‌ எவற்றைக்‌ காக்காவிட்டாலும்‌ நாவையாவது காக்கவேண்டும்‌; காக்கத்‌ தவறினால்‌ சொற்‌ குற்றத்தில்‌ அகப்பட்டுத்‌ துன்புறுவர்‌.


Parimelalagar

யாகாவாராயினும் நாகாக்க-தம்மால் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்க மாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க; காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர்-அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கண் பட்டுத் தாமே துன்புறுவர்.
விளக்கம்:
('யா' என்பது அஃறினைப் பன்மை வினாப் பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உரை நின்றது. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. சொற்குற்றம் - சொல்லின்கண் தோன்றும் குற்றம். 'அல்லாப்பர், செம்மாப்பர்' என்பன போலச் 'சோகாப்பர்' என்பது ஒரு சொல்.)


Manakkudavar

(இதன் பொருள்) எல்லாவற்றையும் அடக்கிலராயினும் நாவொன்றினையும் அடக்குக; அதனை அடக்காக்காற் சொற்சோர்வு பட்டுத் தாமே சோகிப்பா ராதலான், (எ-று). இது சோகத்தின் மாட்டே பிணிக்கப் படுவரென்றது.