குறள் 126

அடக்கமுடைமை

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

orumaiyul aamaipol aindhthadakkal aatrrin
yelumaiyum yaemaap putaiththu


Shuddhananda Bharati

Self

Who senses five like tortoise hold
Their joy prolongs to births sevenfold.


GU Pope

The Possession of Self-restraint

Like tortoise, who the five restrains
In one, through seven world bliss obtains.

Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births.


Mu. Varadarajan

ஒரு பிறப்பில்‌, ஆமைபோல்‌ ஐம்பொறிகளையும்‌ அடக்கியாள வல்லவனானால்‌, அஃது அவனுக்குப்‌ பல பிறப்பிலும்‌ காப்பாகும்‌ சிறப்பு உடையது.


Parimelalagar

ஆமை போல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் - ஆமைபோல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லன் ஆயின்; எழுமையும் ஏமாப்பு உடைத்து - அவ்வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து.
விளக்கம்:
(ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறு போல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுத்தாமல் அடக்க வேண்டும் என்பார், 'ஆமை போ' என்றார். ஒருமைக்கண் செய்த வினையின் பயன் எழுமையும் தொடரும் என்பது இதனான் அறிக. இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒரு பிறப்பிலே பொறிகளைந்தினையும் ஆமைபோல் அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே எழுபிறப்பினுங் காவலாதலை யடைத்து.