குறள் 125

அடக்கமுடைமை

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து

yellaarkkum nanraam panithal avarullum
selvarkkae selvam thakaiththu


Shuddhananda Bharati

Self

Humility is good for all
To the rich it adds a wealth special.


GU Pope

The Possession of Self-restraint

To all humility is goodly grace; but chief to them
With fortune blessed, -'tis fortune's diadem.

Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher riches.


Mu. Varadarajan

பணிவுடையராக ஒழுகுதல்‌ பொதுவாக எல்லோர்க்கும்‌ நல்லதாகும்‌; அவர்களுள்‌ சிறப்பாகச்‌ செல்வர்க்கே மற்றொரு செல்வம்‌ போன்றதாகும்‌.


Parimelalagar

பணிதல் எல்லார்க்கும் நன்றாம்-பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும ஒப்ப நன்றே எனினும்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து-அவ்வெல்லாருள்ளும் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வம் ஆம்சிறப்பினை உடைத்து.
விளக்கம்:
(பெருமிதத்தினைச் செய்யுங் கல்வியும் குடிப்பிறப்பும் உடையார், அஃது இன்றி அவை தம்மானே அடங்கியவழி அவ்வடக்கஞ் சிறந்த காட்டாது ஆகலின், 'செல்வர்க்கே செல்வம் தகைத்து' என்றார். 'செல்வத்தகைத்து' என்பது மெலிந்து நின்றது. பொது என்பாரையும் உடம்பட்டுச் சிறப்பாதல் கூறியவாறு. இவை ஐந்து பாட்டானும் பொதுவகையான் அடக்கத்துச் சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) அடங்கியொழுகல் எல்லார்க்கும் நன்மையாம்; அவரெல்லாரினுஞ் செல்வமுடையார்ககே மிகவும் நன்மையுடைத்தாம்,
(என்றவாறு) செல்வம் - மிகுதி.