குறள் 124

அடக்கமுடைமை

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

nilaiyin thiriyaathu adangkiyaan thotrram
malaiyinum maanap paerithu


Shuddhananda Bharati

Self

Firmly fixed in self serene
The sage looks grander than mountain.


GU Pope

The Possession of Self-restraint

In his station, all unswerving, if man self subdue,
Greater he than mountain proudly rising to the view.

More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself.


Mu. Varadarajan

தன்‌ நிலையிலிருந்து மாறுபடாமல்‌ அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின்‌ உயர்வைவிட மிகவும்‌ பெரிதாகும்‌.


Parimelalagar

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி; மலையினும் மானப் பெரிது-மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது.
விளக்கம்:
(திரியாது அடங்குதல்-பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். 'மலை' ஆகுபெயர்.)


Manakkudavar

(இதன் பொருள்) தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது,
(என்றவாறு) நிலை - வன்னாச்சிரம தன்மம்.