குறள் 123

அடக்கமுடைமை

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்

serivarindhthu seermai payakkum arivarindhthu
aatrrin adangkap paerin


Shuddhananda Bharati

Self

Knowing wisdom who lives controlled
Name and fame seek him untold.


GU Pope

The Possession of Self-restraint

If versed in wisdom's lore by virtue's law you self restrain.
Your self-repression known will yield you glory's gain.

Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise.


Mu. Varadarajan

அறியவேண்டியவற்றை அறிந்து, நல்வழியில்‌ அடங்கி ஒழுகப்‌ பெற்றால்‌, அந்த அடக்கம்‌ நல்லோரால்‌ அறியப்பட்டு மேன்மை பயக்கும்‌.


Parimelalagar

அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்-'அடங்குதலே நமக்கு அறிவாவது' என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப் பெறின்; செறிவு அறிந்து சீர்மை பயக்கும்-அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும்.
விளக்கம்:
(இல்வாழ்வானுக்கு அடங்கும் நெறியாவது, மெய்ம்முதல் மூன்றும் தன்வயத்த ஆதல்.)


Manakkudavar

(இதன் பொருள்) அறியப்படுவனவும் அறிந்து அடக்கப்படுவனவும் அறிந்து நெறி யினானே யடங்கப் பெறின், அவ்வடக்கம் நன்மை பயக்கும்,
(என்றவாறு). அறியப்படுவன - சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் அடக்கப்படுவன - மெய் வாய் கண் மூக்குச் செவி.