குறள் 122

அடக்கமுடைமை

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு

kaakka porulaa adakkaththai aakkam
athaninooung killai uyirkku


Shuddhananda Bharati

Self

No gains with self-control measure
Guard with care this great treasure.


GU Pope

The Possession of Self-restraint

Guard thou as wealth the power of self-control;
Than this no greater gain to living soul!

Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that.


Mu. Varadarajan

அடக்கத்தை உறுதிப்‌ பொருளாகக்‌ கொண்டு போற்றிக்‌ காக்கவேண்டும்‌. அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம்‌ உயிர்க்கு இல்லை.


Parimelalagar

உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை-உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாகக் காக்க-ஆதலான், அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க.
விளக்கம்:
('உயிர்' என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவன் தனக்குப் பொருளாக அடக்கத்தை புண்டாக்குக. அவனுயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறிதில்லை,
(என்றவாறு).