குறள் 121

அடக்கமுடைமை

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்

adakkam amararul uikkum adangkaamai
aarirul uiththu vidum


Shuddhananda Bharati

Self

Self-rule leads to realms of gods
Indulgence leads to gloomy hades.


GU Pope

The Possession of Self-restraint

Control of self does man conduct to bliss th' immortals share;
Indulgence leads to deepest night, and leaves him there.

Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell).


Mu. Varadarajan

அடக்கம்‌ ஒருவனை உயர்த்தித்‌ தேவருள்‌ சேர்க்கும்‌; அடக்கம்‌ இல்லாதிருத்தல்‌, பொல்லாத இருள்‌ போன்ற தீய வாழ்க்கையில்‌ செலுத்திவிடும்‌.


Parimelalagar

அடக்கம் அமரருள் உய்க்கும்-ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும்; அடங்காமை ஆர் இருள் உய்த்துவிடும்-அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும்.
விளக்கம்:
('இருள்' என்பது ஓர் நரக விசேடம். "எல்லாம் பொருளில் பிறந்துவிடும்'' (நான்மனிக். 7) என்றார்போல, 'உய்த்துவிடும்' என்பது ஒரு சொல்லாய் நின்றது.) --


Manakkudavar

அடக்கமுடைமையாவது மன மொழி மெய்களால் அடங்கி ஒழுகுதல். (இதன் பொருள்) மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவ ரிடத்தே கொண்டு செலுத்தும்; அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும்,
(என்றவாறு). மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்கா மைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.