குறள் 120

நடுவு நிலைமை

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்

vaanikam seivaarkku vaanikam paenip
piravum thamapol seyin


Shuddhananda Bharati

Equity

A trader's trade prospers fairly
When his dealings are neighbourly.


GU Pope

Impartiality

As thriving trader is the trader known,
Who guards another's interests as his own.

The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.


Mu. Varadarajan

பிறர்‌ பொருளையும்‌ தம்பொருள்போல்‌ போற்றிச்‌ செய்தால்‌, அதுவே வாணிகம்‌ செய்வோர்க்கு உரிய நல்ல வாணிக முறையாகும்‌.


Parimelalagar

பிறவும் தம்போல் பேணிச் செய்யின் - பிறர் பொருளையும் தம் பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகம் செய்வார்க்கு வாணிகம்-வாணிகஞ்செய்வார்க்கு நன்றாய வணிகம் ஆம்.
விளக்கம்:
(பிறவும் தமபோல் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின; எனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமையின்.)


Manakkudavar

(இதன் பொருள்) வாணிகஞ் செய்வார்க்கு வாணிகமாம்; பிறர் பொருளையும் தமது பொருள் போலப் பேணிச் சோர்வுபடாமற் செய்வாராயின்,
(என்றவாறு) வாணிகம் - இலாபம்.