குறள் 119

நடுவு நிலைமை

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்

sotrkoatdam illathu seppam oruthalaiyaa
utkoatdam inmai paerin


Shuddhananda Bharati

Equity

Justice is upright, unbending
And free from crooked word-twisting.


GU Pope

Impartiality

Inflexibility in word is righteousness,
If men inflexibility of soul possess.

Freedom from obliquity of speech is rectitude, if there be (corresponding) freedom from bias of mind.


Mu. Varadarajan

உள்ளத்தில்‌ கோணுதல்‌ இல்லாத தன்மையை உறுதியாகப்‌ பெற்றால்‌, சொல்லினும்‌ கோணுதல்‌ இல்லா திருத்தல்‌ நடுவுநிலைமையாம்‌.


Parimelalagar

செப்பம் சொற்கோட்டம் இல்லது-நடுவு நிலைமையாவது சொல்லின்கண் கோடுதல் இல்லாததாம்; உள்கோட்டம் இன்மை ஒருதலையாப் பெறன்-அஃது அன்னதாவது மனத்தின்கண் கோட்டம் இன்மையைத் திண்ணிதாகப் பெறின்.
விளக்கம்:
(சொல்: ஊழான் அறுத்துச் சொல்லுஞ் சொல். காரணம் பற்றி ஒருபால் கோடாத மனத்தோடு கூடுமாயின், அறம் கிடந்தவாறு சொல்லுதல் நடுவு நிலைமையாம்; எனவே, அதனோடு கூடாதாயின் அவ்வாறு சொல்லுதல் நடுவு நிலைமை அன்று என்பது பெறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) நடுவுநிலைமையாவது கோட்டமில்லாததாய சொல்லாம் ; உறுதி யாக மனக்கோட்ட மின்மையோடு கூடுமாயின்,
(என்றவாறு). இது நடுவுநிலைமையாவது செவ்வை சொல்லுத லென்பதூஉம் இரு பொருட் பொது மொழி கூறு தலன்றென்பதூஉம் கூறிற்று.