குறள் 1216

கனவுநிலையுரைத்தல்

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்

nanavaena onrillai aayin kanavinaal
kaathalar neengkalar man


Shuddhananda Bharati

Dream visions

If wakeful hours cometo nought
My lov'r in dreams would nev'r depart


GU Pope

The Visions of the Night

And if there were no waking hour, my love
In dreams would never from my side remove.

Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me.


Mu. Varadarajan

நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால்‌, கனவில்‌ வந்த காதலர்‌ என்னை விட்டுப்‌ பிரியாமலே இருப்பர்‌.


Parimelalagar

இதுவும் அது. நனவென ஒன்று இல்லையாயின் - நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்; கனவினான் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார்.
விளக்கம்:
('ஒன்று' என்பது, அதன் கொடுமை விளக்கி நின்றது. அஃது இடையே புகுந்து கனவைப் போக்கி அவரைப் பிரிவித்தது என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. கனவிற் பெற்று ஆற்றுகின்றமை கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) நனவென்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின், கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார், (எ - று )