Kural 1215
குறள் 1215
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது
nanavinaal kandathooum aangkae kanavundhthaan
kanda poluthae inithu
Shuddhananda Bharati
Dream-sight of him delights at once
Awake- What of seeing him -hence.
GU Pope
As what I then beheld in waking hour was sweet,
So pleasant dreams in hour of sleep my spirit greet.
Isaw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is(equally) pleasant.
Mu. Varadarajan
முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுதுமட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.
Parimelalagar
இதுவும் அது. நனவினான் கண்டதூஉம் இனிது ஆங்கே- முன் நனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பந்தானும் இனிதாயிற்று; அப்பொழுதே, கனவும் தான் கண்டபொழுது இனிது - இன்று கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அக் கண்டபொழுதே இனிதாயிற்று. அதனான் எனக்கு இரண்டும் ஒத்தன.
விளக்கம்:
('இனிது' என்பது முன்னும் கூட்டப்பட்டது. கனவு - ஆகுபெயர். 'முன்னும் யான் பெற்றது இவ்வளவே; இன்னும் அது கொண்டு ஆற்றுவல்' என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) நனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதைக்கு இன்பமாம்; அதுபோல, கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் கண்ட அப்பொ ழுதைக்கு இன்பமாம்,
(என்றவாறு) இது கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.