குறள் 1214

கனவுநிலையுரைத்தல்

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு

kanavinaan untaakum kaamam nanavinaan
nalkaarai naatith tharatrku


Shuddhananda Bharati

Dream visions

In dreams I enjoy his love-bliss
Who in wakeful hours I miss.


GU Pope

The Visions of the Night

Some pleasure I enjoy when him who loves not me
In waking hours, the vision searches out and makes me see.

There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness.


Mu. Varadarajan

நனவில்‌ வந்து அன்பு செய்யாத காதலரைத்‌ தேடி அழைத்துக்கொண்டு வருவதற்காகக்‌ கனவில்‌ அவரைப்‌ பற்றிய காதல்‌ நிகழ்ச்சிகள்‌ உண்டாகின்றன.


Parimelalagar

இதுவும் அது. நனவினான் நல்காரை நாடித்தரற்கு - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை அவர் சென்றுழி நாடிக் கொண்டு வந்து கனவு தருதலான்; கனவினான் காமம் உண்டாகும் - இக்கனவின்கண்ணே எனக்கு இன்பம் உண்டாகா நின்றது.
விளக்கம்:
(காமம் - ஆகுபெயர். நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது. 'இயல்பான் நல்காதவரை அவர் சென்ற தேயம் அறிந்து சென்று கொண்டு வந்து தந்து நல்குவித்த கனவால் யான் ஆற்றுவல்' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால், அக்காவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும்,
(என்றவாறு) இது கண்டாற் பயனென்னை? காம நுகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.