குறள் 1213

கனவுநிலையுரைத்தல்

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்

nanavinaal nalkaa thavaraik kanavinaal
kaandalin untaen uyir


Shuddhananda Bharati

Dream visions

In wakeful hours who sees me not
I meet in dreams and linger yet.


GU Pope

The Visions of the Night

Him, who in waking hour no kindness shows,
In dreams I see; and so my lifetime goes!

My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.


Mu. Varadarajan

நனவில்‌ வந்து அன்பு செய்யாத காதலரைக்‌ கனவில்‌ காண்பதால்தான்‌ என்னுடைய உயிர்‌ இன்னும்‌ நீங்காமல்‌ உள்ளதாகின்றது.


Parimelalagar

ஆற்றான் எனக் கவன்றாட்கு 'ஆற்றுவல்' என்பதுபடச் சொல்லியது. நனவினான் நல்காதவரை - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை; கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின் கண் கண்ட காட்சியானே என்னுயிர் உண்டாகா நின்றது.
விளக்கம்:
(மூன்றனுருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன. 'அக்காட்சி யானே யான் ஆற்றியுளேன் ஆகினறேன். 'நீ கவலல் வேண்டா,' என்பதாம்.)


Manakkudavar

(இ-ள்.) நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவின்கண் காண்டலானே என்னுயிர் உண்டாகா நின்றது ; இல்லையாயின், உயிருண்டாதற்குக் காரண முண்டோ ?
(என்றவாறு). இஃது உறங்கினால் காணலாமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.