Kural 1211
குறள் 1211
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து
kaathalar thoothodu vandhtha kanavinukku
yaathusei vaenkol virundhthu
Shuddhananda Bharati
How shall I feast this dream-vision
That brings the beloved's love-mission?
GU Pope
It came and brought to me, that nightly vision rare,
A message from my love,- what feast shall I prepare?
Where with shall I feast the dream which has brought me my dear one's messenger ?
Mu. Varadarajan
(யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?
Parimelalagar
தலைமகன் தூது வரக் கண்டாள் சொல்லியது. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு - யான் வருந்துகின்றது அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு என் மாட்டு வந்த கனவினுக்கு; விருந்து யாது செய்வேன் - விருந்தாக யாதனைச் செய்வேன்?
விளக்கம்:
('விருந்து' என்றது, விருந்திற்குச் செய்யும் உபசாரத்தினை. அது கனவிற்கு ஒன்று காணாமையின், 'யாது செய்வேன்' என்றாள்.)
Manakkudavar
கனவுநிலையுரைத்தலாவது கனவினது நிலையைச் சொல்லுதல். காதலரை யொழிவின்றி நினைப்பார்க்கு உறக்கமில்லையாகும்; அவர் உறங்கினாராயின், அவ ரது சேதியை மறவாது நினைப்பாராதலான், அதன்பின் இது கூறப்பட்டது. தலை மகன் நினைத்தல் தலைமகள் நினைத்தல் என்னும் இரண்டனுள்ளும் இவட்காயின், உறக்கமில்லையென்று கொள்க. (இதன் பொருள்) நங்காதலர் விட்ட தூதாோடே வந்த கனவினுக்கு யான் யாது விருந்து செய்வேன்? (எ - று ). இது தலைமகளாற்றுதற் பொருட்டுக் காதலர் வாராநின்றாரென்று தூதர் வாக் கனாக் கண்டேனென்று தோழி சொல்லியது.