குறள் 1177

கண்விதுப்பழிதல்

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்

ulandhthulandh thulneer aruka vilaindhthilaindhthu
vaenti avarkkanda kan


Shuddhananda Bharati

Wasteful look for wistful love

Let tears dry up pining pining
In eyes that eyed him longing longing.


GU Pope

Eyes consumed with Grief

Aching, aching, let those exhaust their stream,
That melting, melting, that day gazed on him.

The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears.


Mu. Varadarajan

அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக்‌ கண்ட கண்கள இன்று உறக்கமில்லாத துன்பத்தால்‌ வருந்தி வருந்திக்‌ கண்ணீரும்‌ அற்றுப்‌ போகட்டும்‌.


Parimelalagar

இதுவும் அது. விழைந்து இழைந்து வேண்டி அவர்க் கண்ட கண் - விழைந்து உள்நெகிழ்ந்து விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள்; உழந்துழந்து உள்நீர் அறுக - இன்று இத்துயிலாது அழுங்கலாய துன்பத்தினை உழந்து தம் அகத்துள்ள நீர் அற்றே போக.
விளக்கம்:
(அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது.)


Manakkudavar

(இதன் பொருள்) அழுதலை யுழந்துழந்து உள்ள நீர் அறு வனவாக, தாம் வேண்டின வரை விரும்பி நெகிழ்ந்து கண்ட கண்கள்,
(என்றவாறு). இஃது இவ்வாறு அழுதல் தகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.