குறள் 1176

கண்விதுப்பழிதல்

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது

oao inithae yemakkindhnoi seithakan
thaaam ithatrpat dathu


Shuddhananda Bharati

Wasteful look for wistful love

Lo! eyes that wrought this love-sickness
Are victims of the same themselves.


GU Pope

Eyes consumed with Grief

Oho! how sweet a thing to see! the eye
That wrought this pain, in the same gulf doth lie.

The eyes that have given me this disease have themselves been seized with this (suffering). Oh! I am much delighted.


Mu. Varadarajan

எமக்கு இந்தக்‌ காமநோயை உண்டாக்கிய கண்கள்‌, தாமும்‌ இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும்‌ நல்லதே!


Parimelalagar

இதுவும் அது. எமக்கு அந்நோய் செய்த கண் தாம் இதன் பட்டது - எமக்கு அக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் இத்துயிலாது அழுதற் கண்ணே பட்டது; ஓஒஇனிதே - மிகவும் இனிதாயிற்று!
விளக்கம்:
('ஓ' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச் சொல். 'தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும் இந்நோயகத்துப் பட்டது மிகவும் இனிது,
(என்றவாறு). இது நின்கண் கலங்கிற்று; அஃதெனக்கு இன்பதாயிற்று என்றதோழிக்கு அது மிகவும் இனிதென்று தலைம