குறள் 1175

கண்விதுப்பழிதல்

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்

padalaatrraa paithal ulakkum kadalaatrraak
kaamanoi seithayen kan


Shuddhananda Bharati

Wasteful look for wistful love

My eyes causing lust more than sea
Suffer that torture sleeplessly.


GU Pope

Eyes consumed with Grief

The eye that wrought me more than sea could hold of woes,
Is suffering pangs that banish all repose.

Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness.


Mu. Varadarajan

அன்று கடலும்‌ தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என்‌ கண்கள்‌,இன்று உறங்கமுடியாமல்‌ துன்பத்தால்‌ வருந்துகின்றன.


Parimelalagar

இதுவும் அது கடல் ஆற்றாக் காமநோய் செய்த என்கண் - எனக்குக் கடலும் சிறிதாம் வண்ணம் பெரியதாய காமநோயைச் செய்த என் கண்கள்; படல் ஆற்றா பைதல் உழக்கும் - அத் தீவினையால் தாமும் துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன. காமநோய் காட்சியான் வந்ததாகலின், அதனைக் கண்களே செய்ததாக்கிக் கூறினாள். துன்பம் அழுதலானாயது.


Manakkudavar

(இதன் பொருள்) கடலினும் மிக்க காமநோயை என் மாட்டு நிறுத்துதலானே கண்கள் தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறா நின்றன,
(என்றவாறு). இது பிறர்க்கு இன்னாமை செய்தார்க்கு இன்னாமை வந்ததென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.