குறள் 1174

கண்விதுப்பழிதல்

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து

paeyalaatrraa neerulandhtha unkan uyalaatrraa
uivilnoi yenkan niruththu


Shuddhananda Bharati

Wasteful look for wistful love

These eyes left me to endless grief
Crying adry without relief.


GU Pope

Eyes consumed with Grief

Those eyes have wept till all the fount of tears is dry,
That brought upon me pain that knows no remedy.

These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up.


Mu. Varadarajan

என்‌ கண்கள்‌, தப்பிப்‌ பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில்‌ உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும்‌ அழமுடியாமல்‌ நீர்‌ வறண்டுவிட்டன.


Parimelalagar

இதுவும் அது. உண்கண் - உண்கண்கள்; உயலாற்றா உய்வு இல் நோய் செய்வன; என் கண் நிறுத்து - அன்று யான் உய்வ மாட்டாமைக்கு ஏதுவாய ஒழிவில்ல த நோயை என் கண்ணே நிறுத்தி; பெயலாற்றா நீர் உலந்த - தாமும் அழுதலை மாட்டாவண்ணம் நீர் வற்றிவிட்டன.
விளக்கம்:
(நிறுத்தல்: பிரிதலும் பின்கூடாமையும் உடையாரைக் காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். 'முன் எனக்கு இன்னாதன செய்தலாற் பின் தமக்கு இன்னாதன தாமே வந்தன'' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்). உயல் ஆர்றாத வென்மாட்டு உய்வில்லாத நோயை உண்கண்கள் நிறுத்தி, தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன,
(என்றவாறு). கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின்மாறின வென்று கூறியவாறு.