குறள் 1173

கண்விதுப்பழிதல்

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து

kathumaenath thaanokkith thaamae kalulum
ithunakath thakka thutaiththu


Shuddhananda Bharati

Wasteful look for wistful love

Eyes darted eager glance that day
It's funny that they weep today.


GU Pope

Eyes consumed with Grief

The eyes that threw such eager glances round erewhile
Are weeping now. Such folly surely claims a smile!

They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?


Mu. Varadarajan

அன்று காதலரைக்‌ கண்கள்‌ தாமே விரைந்துநோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.


Parimelalagar

இதுவும் அது. தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது - இக்கண்கள் அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கி இன்றும் தாமே இருந்தழுகின்ற இது; நகத்தக்கது உடைத்து - நம்மால் சிரிக்கத்தக்க இயல்பினை உடைத்து.
விளக்கம்:
('கண்கள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இது' என்றது மேற்கூறிய கழிமடச் செய்கையை. அது வருமுன்னர்க் காப்பார்க்கு நகை விளைவிக்கும் ஆகலான் 'நகத்தக்கது உடைத்து' என்றாள்.)


Manakkudavar

(இதன் பொருள்) இக்கண்கள் அன்று விரைந்து தாமே நோக்கி, இன்று தாமே கலுழாநின்ற இது சிரிக்கத்தக்க துடைத்து, (எ - று ). இஃது ஆற்றாமை மிகுதியால் நகுதல் மிக்க தலைமகளை இந்நததற்குக் காரண மென்னையென்று வினாவியதோழிக்கு அவள் கூறியது.