குறள் 1172

கண்விதுப்பழிதல்

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்

thaerindhthunaraa nokkiya unkan parindhthunaraap
paithal ulappathu yevan


Shuddhananda Bharati

Wasteful look for wistful love

Why should these dyed eyes grieve now sans
Regrets for their thoughtless glance?


GU Pope

Eyes consumed with Grief

How glancing eyes, that rash unweeting looked that day,
With sorrow measureless are wasting now away!

The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault).


Mu. Varadarajan

ஆராய்ந்து உணராமல்‌ அன்று நோக்கிக்‌ காதல்‌ கொண்ட கண்கள்‌, இன்று அன்புகொண்டு உணராமல்‌ துன்பத்தால்‌ வருந்துவது ஏன்‌?


Parimelalagar

இதுவும் அது. தெரிந்து உணரா நோக்கிய உண்கண் - மேல் விளைவதனை ஆராய்ந்தறியாது அன்று காதலரை நோக்கி நின்ற உண்கண்கள்; பரிந்து உணராப் பைதல் உழப்பது எவன் - இன்று இது நம்மால் வந்ததாகலின் பொறுத்தல் வேண்டும் எனக் கூறுபடுத்துணராது துன்பம் உழப்பது என் கருதி? விளைவது: பிரிந்து போயவா வாராமையின் காண்டற்கு அரியராய் வருத்துதல். முன்னே வருவதறிந்து அது காவாதார்க்கு அது வந்தவழிப் பொறுத்தலன்றேயுள்ளது? அதுவும் செய்யாது வருந்துதல் கழிமடச் செய்கை என்பதாம்.


Manakkudavar

(இ-ள்.) முன்பு அவர் நல்லரென்று தெரிந்து உணர்ந்து நோக்கிய உண்கண் கள் இப்பொழுது வருத்தமுற்று, நல்லரென்று உணராவாய், துன்பமுழப்பது என் றுக்கு ?
(என்றவாறு). இது கண்ணினறியாமையைத் தோழிக்குச் சொல்லியது.