Kural 117
குறள் 117
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு
keduvaaka vaiyaathu ulakam naduvaaka
nanrikkan thangkiyaan thaalvu
Shuddhananda Bharati
The just reduced to poverty
Is not held down by equity.
GU Pope
The man who justly lives, tenacious of the right,
In low estate is never low to wise man's sight.
The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.
Mu. Varadarajan
நடுவுநிலையாக நின்று அறநெறியில் நிலைத்து வாழ்கின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என்று கொள்ளாது உலகம்.
Parimelalagar
நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவாக நின்று அறத்தின் கண்ணே தங்கியவனது வறுமையை; கெடுவாக வையாது உலகம்-வறுமை என்று கருதார் உயர்ந்தோர்.
விளக்கம்:
நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு - நடுவாக நின்று அறத்தின் கண்ணே தங்கியவனது வறுமையை; கெடுவாக வையாது உலகம்-வறுமை என்று கருதார் உயர்ந்தோர். ('கெடு' என்பது முதல்நிலைத் தொழிற் பெயர். 'செல்வம் என்று கொள்ளுவர்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் முறையே கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா என்பதூஉம், கோடுதல் கேட்டிற்கேதுவாம் என்பதூஉம், கோடாதவன் தாழ்வு கேடு அன்று என்பதூஉம் கூறப்பட்டன.)
Manakkudavar
(இதன் பொருள்) நன்மையின்கண்ணே நடுவாக நின்றவனுக்கு அது காரணமாகப் பொருட்கேடு உண்டாயின், அதனை உலகத்தார் கேடாகச் சொல்லார், ஆக்கத் தோடே யெண்ணுவர், (எ – று).