குறள் 116

நடுவு நிலைமை

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்

keduvalyaan yenpathu arikathan naenjcham
naduvoreei alla seyin


Shuddhananda Bharati

Equity

Of perdition let him be sure
Who leaves justice to sinful lure.


GU Pope

Impartiality

If, right deserting, heart to evil turn,
Let man impending ruin's sign discern!

Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, "I shall perish."


Mu. Varadarajan

தன்‌ நெஞ்சம்‌ நடுவுநிலைமை நீங்கித்‌ தவறு செய்ய நினைக்குமாயின்‌, “நான்‌ கெடப்போகின்றேன்‌' என்று ஒருவன்‌ அறிய வேண்டும்‌.


Parimelalagar

தன் நெஞ்சம் நடுவு ஒரீஇ அல்ல செயின் - ஒருவன் தன் நெஞ்சம் நடுவு நிற்றலை ஒழித்து நடுவல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்; யான் கெடுவல் என்பது அறிக-அந்நினைவை 'யான் கெடக்கடவேன்' என்று உணரும் உற்பாதமாக அறிக.
விளக்கம்:
(நினைத்தலும் செய்தலோடு ஒக்கும் ஆகலின், 'செயின்' என்றார்.)


Manakkudavar

(இதன் பொருள்) தனது நெஞ்சு நடுவுநிலைமையை நீங்கி நடுவல்லாதவற்றைச் செய்யு மாயின், அஃதே துவாக எனக்குக் கேடு வருமென்று தானே யறிக,
(என்றவாறு).