Kural 115
குறள் 115
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி
kaedum paerukkamum illalla naenjchaththuk
koataamai saannork kani
Shuddhananda Bharati
Loss and gain by cause arise;
Equal mind adorns the wise.
GU Pope
The gain and loss in life are not mere accident;
Just mind inflexible is sages' ornament.
Loss and gain come not without cause; it is the ornament of the wise to preserve evenness of mind (under both).
Mu. Varadarajan
கேடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாதவை அல்ல; ஆகையால் நெஞ்சில் நடுவுநிலைமை தவறாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகாகும்.
Parimelalagar
கேடும் பெருக்கமும் இல் அல்ல-தீவினையால் கேடும், நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி-அவ்வாற்றை யறிந்து அவை காரணமாக மனத்தின்கண் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது.
விளக்கம்:
(அவை காரணமாகக் கோடுதலாவது, அவை இப்பொழுது வருவனவாகக் கருதிக் கேடு வாராமையைக் குறித்தும் பெருக்கம் வருதலைக் குறித்தும் ஒருதலைக்கண் நிற்றல். 'அவற்றிற்குக் காரணம் பழவினையே; கோடுதல் அன்று' என உண்மை உணர்ந்து நடுவுநிற்றல் சால்பினை அழகு செய்தலின், 'சான்றோர்க்கு அணி' என்றார்.)
Manakkudavar
(இதன் பொருள்) கேடுவருதலும் ஆக்கம் வருதலும் உலகத்தில்லையல்ல; அவ்விரண்டி னுள்ளும் யாதானுமொன்று வந்த காலத்துத் தன்னெஞ்சு கோடாம லொழுகல் சான்றோர்க்கு அழகாம்,
(என்றவாறு)