குறள் 114

நடுவு நிலைமை

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்

thakkaar thakavilar yenpathu avaravar
yechchaththaatr kaanappa padum


Shuddhananda Bharati

Equity

The worthy and the unworthy
Are seen in their posterity.


GU Pope

Impartiality

Who just or unjust lived shall soon appear:
By each one's offspring shall the truth be clear.

The worthy and unworthy may be known by the existence or otherwise of good offsprings.


Mu. Varadarajan

நடுவுநிலைமை உடையவர்‌ நடுவுநிலைமை இல்லாதவர்‌ என்பது அவரவர்க்குப்‌ பின்‌ எஞ்சிநிற்கும்‌ புகழாலும்‌ பழியாலும்‌ காணப்படும்‌.


Parimelalagar

தக்கார் தகவிலர் என்பது-இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்; அவரவர் எச்சத்தால் காணப்படும்-அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும்.
விளக்கம்:
(தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) செவ்வை யுடையார் செவ்வையில் ரென்பது அவரவர் ஆரவாரத் தொழிலினானே காணப்படும்,
(என்றவாறு). இது தவமளவிலே நிற்பதல்லது தம் மக்களையும் விடாதென்பது கூறிற்று. (இதனால் அச்சத்தால் என்பதற்கு மக்களானே என்றுரையிருக்கலாமென்பது விளங்குகின்றது.)