குறள் 113

நடுவு நிலைமை

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்

nanrae tharinum naduvikandhthaam aakkaththai
anrae yoliya vidal


Shuddhananda Bharati

Equity

Though profitable, turn away
From unjust gains without delay.


GU Pope

Impartiality

Though only good it seem to give, yet gain
By wrong acquired, not e'en one day retain!

Forsake in the very moment (of acquisition) that gain which, though it should bring advantage, is without equity.


Mu. Varadarajan

தீமை பயக்காமல்‌ நன்மையே தருவதானாலும்‌ நடுவுநிலைமை தவறி உண்டாகும்‌ ஆக்கத்தை அப்போதே கைவிட வேண்டும்‌.


Parimelalagar

நன்றே தரினும்-தீங்கு அன்றி நன்மையே பயந்த தாயினும்; நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல்-நடுவு நிற்றலை ஒழிதலான் உண்டாகின்ற ஆக்கத்தை அப்பொழுதே ஒழிய விடுக.
விளக்கம்:
(நன்மை பயவாமையின் 'நன்றே தரினும்' என்றார். 'இகத்தலான்' என்பது 'இகந்து' எனத் திரிந்து நின்றது. இவை இரண்டு பாட்டானும் முறையே நடுவு நிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தலும், ஏனைச் செல்வம் தீமை பயத்தலும் கூறப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) பெருமையே தரினும் நடுவுநிலைமையை நீங்கி வரும் ஆக்கத்தை அவ்வாக்கம் வருதற்குத் தொடக்கமான அன்றே யொழிய விடுக,
(என்றவாறு).