Kural 1157
குறள் 1157
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை
thuraivan thurandhthamai thootrraakol munkai
iraiiravaa ninra valai
Shuddhananda Bharati
Will not my gliding bangles' cry
The parting of my lord betray?
GU Pope
The bracelet slipping from my wrist announced before
Departure of the Prince that rules the ocean shore.
Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?
Mu. Varadarajan
என் மெலிவால் முன்கையில் இறைகடந்து சுழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ?
Parimelalagar
இதுவும் அது. துறைவன் துறந்தமை - துறைவன் என்னைப் பிரியலுற்றமையை; முன் கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல் - அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள் உனக்கு அறிவியாவோ? அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ?
விளக்கம்:
(முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், 'இறவாநின்ற' என்றும் கூறினாள். 'அழுங்கு வித்து வந்து கூறற்பாலை யல்லையாய நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்;' எனப் புலந்து கூறியவாறு.)
Manakkudavar
(இதன் பொருள்) இறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ? முன் கை யின் இறையைக் கடவாநின்ற வளைகள், (எ - று ) முன்பே அறிதலான், உடம்பு மெலிந்தது என்றவா றாயிற்று.