குறள் 1154

பிரிவாற்றாமை

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு

aliththanjchal yenravar neeppin thaeliththasol
thaeriyaarkku untoh thavaru


Shuddhananda Bharati

Pangs of separation

He parts whose love told me - fear not
Is my trust in him at default?


GU Pope

Separation unendurable

If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred
By those who trusted to his reassuring word?

If he who bestowed his love and said "fear not" should depart, will it be the fault of those who believed in (his) assuring words ?


Mu. Varadarajan

அருள்‌ மிகுந்தவராய்‌ அஞ்ச வேண்டா! என்று முன்‌ தேற்றியவர்‌ பிரிந்து செல்வாரானால்‌ அவர்‌ கூறிய உறுதி மொழியை நம்பித்‌ தெளிந்தவர்க்குக்‌ குற்றம்‌ உண்டோ?


Parimelalagar

இதுவும் அது. அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் - எதிர்ப்பட்ட ஞான்றே தலையளி செய்து, 'நின்னிற் பிரியேன் அஞ்சல் என்றவர் தாமே பின் பிரிவராயின்; தெளித்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ - அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றம் ஊண்டோ?
விளக்கம்:
('தேறியார்' என்பது தன்னைப் பிறர்போற் கூறல். 'சொல்லும் செயலும் ஒவ்வாமைக் குற்றம் அவர்க்கு எய்தும்; அஃது எய்தாவகை அழுங்குவி' என்பது கருத்து.)


Manakkudavar

(இதன் பொருள்) நம்மைத் தலையளி செய்து நின்னிற் பிரியேன், நீ அஞ்சல் என்றவர் தாமே நீங்கிப் போவாராயின், அவர் தெரிவித்த சொல்லைத் தெளிந்தவர்க்கு வருவதொரு குற்றம் உண்டோ ?
(என்றவாறு). தன்மையைப் படர்க்கைபோற் கூறினார்.