குறள் 1151

பிரிவாற்றாமை

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை

sellaamai untael yenakkurai matrrunin
valvaravu vaalvaark kurai


Shuddhananda Bharati

Pangs of separation

Tell me if you but do not leave,
Your quick return to those who live.


GU Pope

Separation unendurable

If you will say, 'I leave thee not,' then tell me so;
Of quick return tell those that can survive this woe.

If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then.


Mu. Varadarajan

பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால்‌ எனக்குச்‌ சொல்‌; பிரிந்து சென்று விரைந்து வருதலைப்‌ பற்றியானால்‌ அதுவரையில்‌ உயிர்‌ வாழ வல்லவர்க்குச்‌ சொல்.


Parimelalagar

'பிரிந்து கடிதின் வருவல்' என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. செல்லாமை உண்டேல் எனக்கு உரை - நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல்; மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை - அஃதொழியப் பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல்.
விளக்கம்:
(தலைமகளை ஒழித்து 'எனக்கு' என்றாள், தான் அவள் என்னும் வேற்றுமை அன்மையின். அக்காலமெல்லாம் ஆற்றியிருந்து அவ்வரவு காணவல்லளல்லள்; பிரிந்தபொழுதே இறந்துபடும் என்பதாம். அழுங்குவித்தல்: பயன். இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்.)


Manakkudavar

பிரிவாற்றாமையாவது அலரறிவுறுத்தல் படத் தலைமகன் தலைமகளை வரைந்து கொண்டு இன்புறுமாயினும், பிரியுங்காலத்து ஆற்றாமை கூறுதல். மேல தனோடியையும் இது. இது முதலாகக் கற்பென்று கொள்ளப்படும். (இதன் பொருள்) காதலர் போகாமையுண்டாயின், எனக்குக் கூறு ; பிரிந்தார் நீட்டி யாது விரைந்து வருவாரென்று சொல்லுகின்ற வரவினைப் பின்புளராய் வாழ் வார்க்குக் கூறு,
(என்றவாறு). இது கடித்து வருவாரென்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.