குறள் 1115

நலம்புனைந்துரைத்தல்

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை

anichchappook kaalkalaiyaal paeithaal nukappitrku
nalla pataaa parai


Shuddhananda Bharati

Beauty extolled

Anicha flower with stem she wears
To her breaking waist sad-drum-blares!


GU Pope

The Praise of her Beauty

The flowers of the sensitive plant as a girdle around her she placed;
The stems she forgot to nip off; they 'Il weigh down the delicate waist.

No merry drums will be beaten for the (tender) waist of her who has adorned herself with the anicham without having removed its stem.


Mu. Varadarajan

அவள்‌ தன்‌ மென்மை அறியாமல்‌ அனிச்ச மலர்களைக்‌ காம்பு களையாமல்‌ சூடினாள்‌; அவற்றால்‌ நொந்து வருந்தும்‌ அவளுடைய இடைக்குப்‌ பறைகள்‌ நல்லனவாய்‌ ஒலியா.


Parimelalagar

பகற்குறிக்கண் பூ அணி கண்டு சொல்லியது. அனிச்சப்பூக்கால் களையாள் பெய்தாள் - இவள் தன் மென்மை கருதாது அனிச்சப்பூவை முகிழ் களையாது சூடினாள்; நுசுப்பிற்கு நல்ல பறை படா - இனி இவள் இடைக்கு நல்ல பறைகள் ஒலியா.
விளக்கம்:
('அம் முகிழ்ப்பாரம் பொறாமையின் இடை முரியும். முரிந்தால், அதற்குச் செத்தார்க்கு உரிய நெய்தற்பறையே படுவது' என்பதாம். மக்கட்கு உரிய சாக்காடும் பறைபடுதலும் இலக்கணைக் குறிப்பால் நுசுப்பின்மேல் ஏற்றப்பட்டன.)


Manakkudavar

(இதன் பொருள்) அனிச்சப்பூவைக் காம்புகள் அறாது மயிரில் அளைந்தாள்; இனி இவ ளது நுசுப்பிற்கு நல்லவாக ஒலிக்கமாட்டா பறை,
(என்றவாறு). இஃது இடையினது நுண்மை கூறிற்று.