Kural 111
குறள் 111
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்
thakuthi yenavonru nanrae pakuthiyaal
paatrpatdu olukap paerin
Shuddhananda Bharati
Equity is supreme virtue
It is to give each man his due.
GU Pope
If justice, failing not, its quality maintain,
Giving to each his due, -'tis man's one highest gain.
That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.
Mu. Varadarajan
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
Parimelalagar
தகுதி என ஒன்றே நன்று-நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல், நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின்,
விளக்கம்:
(தகுதி உடையதனைத் 'தகுதி' என்றார். "ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆன் உருபு 'தோறு'ம் என்பதன் பொருட்டாய் நின்றது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான் நடுவு நிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.)
Manakkudavar
நடுவுநிலைமையாவது நட்டார்மாட்டும் பகைவர்மாட்டும் ஒக்க நிற்கும் நிலைமை. (இதன் பொருள்) நடுவு நிலைமை யென்று சொல்லப்படுகின்ற தொன்று நல்லதே அவரவர் நிலைமைப்பகுதியோடே அறத்தின் பாற்பட்டு ஒழுகப் பெறுமாயின்,