Kural 110
குறள் 110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
yendhnanri konraarkkum uivuntaam uivillai
seindhnanri konra makatrku
Shuddhananda Bharati
The virtue-killer may be saved
Not benefit-killer who is damned.
GU Pope
The Knowledge of Benefits Conferred - Gratitude
Who every good have killed, may yet destruction flee;
Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free!
He who has killed every virtue may yet escape; there is no escape for him who has killed a benefit.
Mu. Varadarajan
எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.
Parimelalagar
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்-பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்; செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை-ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃது இல்லை.
விளக்கம்:
Manakkudavar
(இதன் பொருள்) எல்லா நன்மைகளையுஞ் சிதைத்தார்க்கும் பின்பொரு காலத்தே யாயினும் உய்வுண்டாம்; ஒருவன் செய்த நன்றியைச் சாவாக்கின மகனுக்கு ஒரு காலத்தினும் உய்தலில்லை,
(என்றவாறு).