Kural 1106
குறள் 1106
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்
uruthoru uyirthalirppath theendalaal paethaikku
amilthin iyanrana thol
Shuddhananda Bharati
My simple maid has nectar arms
Each embrace brings life-thrilling charms.
GU Pope
Ambrosia are the simple maiden's arms; when I attain
Their touch, my withered life puts forth its buds again!
The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them.
Mu. Varadarajan
பொருந்தும்போதெல்லாம் உயிர் தளிர்க்கும்படியாகத் தீண்டுதலால் இவளுக்குத் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
Parimelalagar
இதுவும் அது. உயிர் உறுதோறு தளிர்ப்பத் தீண்டலால் - தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறும் தளிர்க்கும் வகை தீண்டுதலான்; பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினால் செய்யப்பட்டன.
விளக்கம்:
(ஏதுவாகலான் தீண்டல் அமிழ்திற்கு எய்திற்று - வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி, 'அவை அமிழ்தின் இயன்றன' என்றான். தளிர்த்தல் - இன்பத்தால் தழைத்தல்.)
Manakkudavar
(இதன் பொருள்) சாருந்தோறும் என்னுயிர் தழைப்பச் சார்தலால், பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாகவேண்டும்,
(என்றவாறு). சாராத காலத்து இறந்துபடுவதான உயிரைத் தழைக்கப் பண்ணுதலான், அமுதம் போன்றதென்றவாறு. இது கூடிய தலைமகன் மகிழ்ந்து கூறியது.