குறள் 1105

புணர்ச்சிமகிழ்தல்

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்

vaetda poluthin avaiyavai polumae
thottaar kathuppinaal thol


Shuddhananda Bharati

Embrace bliss

The arms of my flower-tressed maid
Whatever I wish that that accord.


GU Pope

Rejoicing in the Embrace

In her embrace, whose locks with flowery wreaths are bound,
Each varied form of joy the soul can wish is found.

The shoulders of her whose locks are adorned with flowers delight me as if they were the very sweets I have desired (to get).


Mu. Varadarajan

மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள்‌ விருப்பமான பொருள்களை நினைந்து விரும்பிய பொழுது அவ்வப்பொருள்களைப்‌ போலவே இன்பம்‌ செய்கின்றன.


Parimelalagar

தோழியிற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது. வேட்ட பொழுதின் அவையவை போலுமே - மிக இனியவாய பொருள்களைப் பெறாது அவற்றின்மேல் விருப்பங்கூர்ந்த பொழுதின்கண் அவையவைதாமே வந்து இன்பஞ்செய்யுமாறு போல இன்பஞ் செய்யும்; தோட்டார் கதுப்பினாள் தோள் - எப்பொழுதும் பெற்றுப் புணரினும், பூவினை அணிந்த தழைத்த கூந்தலினை யுடையாள் தோள்கள்.
விளக்கம்:
(தோடு: ஆகுபெயர். இயற்கைப் புணர்ச்சி, இடந்தலைப்பாடு, பாங்கற் கூட்டத்துக்கண் முன்னரே நிகழ்ந்திருக்க, பின்னரும் புதியவாய் நெஞ்சம் பிணித்தலின், அவ்வாராமை பற்றி இவ்வாறு கூறினான். தொழிலுவமம்.)


Manakkudavar

(இதன் பொருள்) காதலித்த பொழுது காதலிக்கப்பட்ட அவ்வப்பொருள்களைப் போலும்; தோளின்கண் தாழ்ந்த கூந்தலினையுடையவள் தோள்,
(என்றவாறு). தோட்டாழ்க துப்பு - புணர்ச்சிக்காலத்து அசைந்து தாழ்ந்த கூந்தல்.