குறள் 1104

புணர்ச்சிமகிழ்தல்

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்

neengkin thaerooum kurukungkaal thannaennum
theeyaandup paetrraal ival


Shuddhananda Bharati

Embrace bliss

Away it burns and cools anear
Wherefrom did she get this fire?


GU Pope

Rejoicing in the Embrace

Withdraw, it burns; approach, it soothes the pain;
Whence did the maid this wondrous fire obtain?

From whence has she got this fire that burns when I withdraw and cools when I approach ?


Mu. Varadarajan

நீங்கினால்‌ சுடுகின்றது: அணுகினால்‌ குளிர்ச்சியாக இருக்கின்றது; இத்தகைய புதுமையான தீயை இவள்‌ எவ்விடத்திலிருந்து பெற்றாள்‌?


Parimelalagar

பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது. நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ - தன்னை அகன்றுழிச் சுடா நிற்கும். அணுகுழிக் குளிராநிற்கும் இப்பெற்றித்தாய தீயை; இவள் யாண்டுப் பெற்றாள்? -
விளக்கம்:
(என் கண் தருதற்கு இவள் எவ்வுலகத்துப் பெற்றாள்? கூடாமுன் துன்புறுதலின் 'நீங்கின் தெறூஉம்' என்றும், கூடியபின் இன்புறுதலின், 'குறுகுங்கால் தண் என்னும்' என்றும், இப்பெற்றிதோர் தீ உலகத்துக்கு இல்லையாமாகலின் 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான். தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான். அவளான் அது வெளிப்படுதலின்.)


Manakkudavar

(இதன் பொருள்) தன்னை நீங்கினவிடத்துச் சுடும், குறுகினவிடத்துக் குளிரும்; இத்தன்மையாகிய தீ எவ்விடத்துப் பெற்றாள் இவள்,
(என்றவாறு). இது புணர்ச்சி உவகையாற் கூறுதலான், புணர்ச்சி மகிழ்தலாயிற்று.